Thursday, August 31, 2017

/ , / ஜோடி­யொன்று தொடர்பில் தெரியவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்

ஜோடி­யொன்று தொடர்பில் தெரியவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்

ஜோடி­யொன்று கர்ப்­பிணிப் பெண்­ணொ­ரு­வ­ரி­ட­மி­ருந்து குழந்­தையைத் திரு­டு­வ­தற்­காக அவரை படு­கொலை செய்து ஆற்றில் வீசிய அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் அமெ­ரிக்க வட கரோ­லினா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.
8 மாத கர்ப்­பி­ணி­யான சவன்னா லாபு­ரொன்­டெயின் கிரேவின்ட் (22 வயது) கடந்த 19 ஆம் திகதி காணாமல் போயி­ருந்தார்.
இத­னை­ ய­டுத்து அவரைத் தேடும் நட­வ­டிக்கை பரந்­த­ளவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. மேற்­படி தேடும் நட­வ­டிக்­கையில் மோப்­ப­நாய்கள் சகி தம் நூற்­றுக்­க­ணக்­கான தொண்­டர்­களும் சட்ட அமு­லாக்க அதி­கா­ரி­களும் பங்­கேற்­றி­ருந்­த னர்.
இந்­நி­லையில் சவன்­னாவின் சடலம் பிளாஸ் டிக் பையால் சுற்­றப்­பட்ட நிலையில் அவர் காணாமல் போன­தற்கு 8 நாட்கள் கழித்து கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஆறொன்றில் மரக்­குற்­றி­யொன்றில் சிக்­கிய நிலையில் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.
இத­னை­ய­டுத்து மேற்­படி படு­கொ­லையை மேற்­கொண்ட சந்­தே­கத்தில் 32 வய­தான வில்­லியம் ஹோஹ்ன் மற்றும் 38 வய­தான புறூக் குறூவ்ஸ் ஆகியோர் கைது­செய்­யப்­பட்­டனர்.
அவர்­க­ளது வீட்­டிற்கு விஜயம் செய்­தி­ருந்த நிலை­யி­லேயே சவன்னா காணா­மல்­போ­யி­ருந் தார்.
அத்­துடன் அந்த ஜோடியின் பரா­ம­ரிப்­பி­லி­ருந்த சவன்­னா­வி­னது பச்­சிளம் பெண் குழந்­தை­ தொடர்­பிலும் பொலி­ஸாருக்கு சந்­தேகம் ஏற்­பட்­டது.
ஆரம்­பத்தில் அந்தக் குழந்­தையை தமது குழந்தை என வாதிட்ட புறூக் குறூவ்ஸ் பின்னர் சவன்னா காண­ாமல்­போ­னதாக கூறப்படும் தினத்திற்கு இரு நாட்கள் கழித்து தமது வீட்டிற்கு வந்து தனது குழந்­தையை தம்­மிடம் ஒப்­ப­டைத்து விட்டுச் சென்­றி­ருந்­தாக கூறினார்.
அவர்­க­ளிடம் மேற்­கொண்ட தீவிர விசா­ர­ணை­களின் போது சவன்னாவின் பிறக்காத குழந் தையைத் திருடி அதனை தமது குழந்தையாக உரிமை கோரவே அவரை படுகொலை செய்ததாக புறூக் குறூவ்ஸ் ஒப்புக்கொண் டுள்ளார்.

about author

Blogger Sens it website about blogger templates and blogger widgets you can find us on social media
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post